கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடும் நோக்கத்தில் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்துக்கு தனது பாட்டியை சந்திக்கப் புறப்பட்ட 6 வயதுச் சிறுவன் தவறான விமானத்தில் ஏற்றப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தனியாகப் பயணம் செய்த குறித்த சிறுவன், ஃபொர்ட் மாயர்ஸ் (Fort Myers) எனும் நகருக்குச் செல்லவேண்டிய நிலையில் தவறுதலாக ஓர்லாண்டோ நகருக்குச் செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளான்.
இரு நகரங்களுக்கும் இடையே சுமார் 258 கிலோமீட்டர் தூரம் இருக்கும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து தவறிழைத்தமைக்கு Spirit Airlines விமான சேவை மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. மேலும் தவறை உணர்ந்தவுடன் சிறுவனின் குடும்பத்தைத் தொடர்புகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணத்தின்போது சிறுவனுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டதாக அந்நிறுவனம் CNN செய்தி சேவையிடம் கூறியது.
இதேநேரம் அவனை ஃபொர்ட் மாயர்ஸில் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பாட்டிக்கு ஏமாற்றம் காத்திருந்தது.
பின்னர் அவனது பாட்டி பேரனைக் கூட்டிவருவதற்காகக் காரில் புறப்பட்டு ஓர்லாண்டோவிற்குச் சென்றார்.
இந்நிலையில் சிறுவனை தவறான விமானத்தில் ஏற்றப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதக Spirit Airlines தெரிவித்தது.