யுவதி ஒருவர் பாடசாலை மாணவியாக வேடமணிந்து இணையத்தில் அவரது ஆபாச விடீயோக்களை வெளியிட்ட தம்பதியர் கடுகன்னாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் ருவன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் மற்றும் பிலிமத்தலாவைச் சேர்ந்த 29 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விசாரணையில், இருவரும் சட்டப்பூர்வமாக தங்கள் திருமணத்தை பதிவு செய்துள்ளதாகவும், அவர்கள் பட்டதாரிகளாக இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு திருமண விழாவை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் தெரியவந்தது.
பணம் சம்பாதிப்பதற்காக இதுபோன்ற போலி வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டதாகவும், அதன் மூலம் மாதம் ரூ.100,000 சம்பாதித்ததாகவும் தம்பதியினர் ஒப்புக்கொண்டனர்.
காணொளிகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கணினி, பாடசாலை சீருடை, டை உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த ஜோடியின் ஆன்லைன் பயனர் எண்ணிக்கை 4,400 என்று விசாரணையில் தெரியவந்துள்ளது, அதே நேரத்தில் அவர்கள் கடைசியாகப் பகிர்ந்த வீடியோ 8.7 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
கடுகன்னாவ பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கடுமையான பிணை நிபந்தனைகளில் விடுவிக்கப்பட்டனர். (யாழ் நியூஸ்)