தன்னுடைய மகளை துஷ்பிரயோகம் செய்வதற்கு ஒத்தாசை நல்கினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அச்சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்ட சம்பவமொன்று மொனராகலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது..
ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமி வன்புணர்வுக்கு உட்படுது்தப்பட்டார். இந்த குற்றத்திற்கு உதவி குற்றச்சாட்டிலேயே, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையை ஹம்பேகமுவ பொலிஸார் கடந்த 13ஆம் திகதியன்று கைது செய்துள்ளனர்.
இக்குற்றச் சம்பவம் 2023 நவம்பர் 28ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளதுடன், ஹம்பேகமுவ, கொடவெஹரமங்கட, திஹியாகலையைச் சேர்ந்த 55 வயதுடைய தந்தையே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் காதலனை அழைத்துச் சென்று கணவன் மனைவியாக வாழ்வதற்கு ஊக்குவித்த குற்றஞ்சாட்டிலேயே சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியும் அதே பகுதியில் வசிக்கும் இளைஞனும் பொலிஸாரால் முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஹம்பேகமுவ பொலிஸார், மகளை பலாத்காரம் செய்ய ஊக்குவித்தார் என்றக் குற்றச்சாட்டில் அச்சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளனர்.