பிரமிட் திட்டம் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிறுவனம் ஒன்றின் ஐந்து பணிப்பாளர்களையும் பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, ஒவ்வொரு சந்தேக நபரையும் தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல உத்தரவிட்டதுடன் சந்தேக நபர்கள் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.