கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவிற்கு எதிரான மனு மீதான விசாரணையை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என அமைச்சர் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கு விளையாட்டு அமைச்சரினால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் இடைக்கால குழுவின் செயற்பாடுகளை இடைநிறுத்தி தடை உத்தரவு பிறப்பித்தமைக்கு எதிராக விளையாட்டு அமைச்சர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.