தெகிவளை பள்ளிவாசல் காணி விவகாரம்; மீண்டும் விற்பனைக்கு முயற்சி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தெகிவளை பள்ளிவாசல் காணி விவகாரம்; மீண்டும் விற்பனைக்கு முயற்சி!


சவுதி அரேபியாவைச் சேர்ந்த தனவந்தர் ஒருவரால் பள்ளிவாசல் ஒன்றுக்காகவும், இன்னும் பல விதங்களிலும் முஸ்லிம் சமூகம் பயன்பெறும் வகையில் வாங்கி அன்பளிப்பு செய்யப்பட்ட சுமார் 50 கோடி ரூபாய் பெறுமதியான காணியை ஜமீயத்தில் உலமாவின் செயலாளர் ஒருவரின் தலைமையில் அபகரித்து விற்பனை செய்ய முயற்சிகள் செய்வது சம்பந்தமான உண்மைகளை முஸ்லிம் சமூகத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் உலமாக்கள், புத்திஜீவிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதனடிப்படையில் சில அரசியல் தலைவர்கள் புத்திஜீவிகள் ஜமீயத்துல் உலமா இவ்விடத்தில் தலையிட்டதோடு இதை இதை பாதுகாப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கௌரவ கலாச்சார அமைச்சர் அவர்கள் இதை வக்பு சொத்தாக பதிவு செய்து இதை விற்பனை செய்ய முயற்சித்தவர்களுக்கு எதிராக விசாரணை ஒன்றை நடத்தும் படியும் முஸ்லிம் கலாச்சார அமைச்சுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அத்தோடு பொதுமக்களால் இதற்கான வழக்குகளும் தொடரப்பட்டது. இது சம்பந்தமாக ஆஜரான வக்பு சபையின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் இச்சொத்தை வக்பு சபையில் பதிவு செய்ய ஒத்துக்கொண்டதோடு வக்புக்கு சபையின் அடுத்த அமர்வுகளில் இதை பதிவு செய்து இதற்கான தீர்வுகாண ஒத்துக் கொண்டிருந்தது.

அதேவேளை இவ்விடத்தில் தலையிட்ட ஜமியத்துல் உலமா இது சம்பந்தப்பட்ட செயலாளருக்கு இதை வக்பு சொத்தாக மாற்றும் படி கடுமையான அழுத்தங்களை கொடுத்ததோடு, சம்பந்தப்பட்ட செயலாளரும், தலைவர் மற்றும் முக்கிய நிர்வாக உறுப்பினர்களின் முன்னிலையில் இதை இதை வக்பு சொத்தாக பதிவு செய்ய உறுதிமொழி வழங்கியிருந்தார். இதற்கு மாறாகவே வக்பு செய்வதை தடுக்கும் வகையில் கடந்த 27.10.2023 அன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இவ்விடத்தில் தலையீடு செய்ய அனுமதி கேட்டு தலைமைத்துவத்திற்கு நயவஞ்சகத்தனமாக, மனு ஒன்றை சர்ச்சைக்குரிய செயலாளர் தாக்கல் செய்தமையும் குறிப்பிடத்தக்கது. அதை நீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில் காணின் மீது எழுதப்பட்டுள்ள போலியான அறக்கட்டளையை பதிவு செய்ய அபகரிப்பாளர்கள் முயற்சி செய்து வருவதாகவும், இது தோடர்பில் விலை போன சில உயர் அதிகாரிகள் உள்ளளவிலான ஒத்துழைப்புகளை இவர்களுக்கு வழங்கி வருவதாகவும் உத்தியோபூர்வமான உள்ளக ரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொத்தை விற்பனை செய்வதற்கு ஏதுவாக இவர்களினால் அறக்கட்டளை எழுதப்பட்டுள்ளது. இதில் பின்வரு காணப்படுகின்றது.

(அறக்கட்டளை)
Section (05)
THE BORD OF TRUSTEES 
SHELL HAVE POWER

Section (F)
To sell, gift , exchange,or mortgage the trust property or any part of parts thereof the proceeds of any such dealing to form part of the trust property or to donate properties prart of the rust property. 

அறக்கட்டளைச் சொத்தின் ஒரு பகுதியை உருவாக்க , அபிவிருத்தி செய்ய , அல்லது அறக்கட்டளைச் சொத்தின் சொத்துக்களை நன்கொடையாக வழங்க, அறக்கட்டளைச் சொத்தை அல்லது அதன் பாகங்களில் ஏதேனும் ஒரு பகுதியை விற்பது, ப பரிசளிப்பது, பரிமாற்றம் செய்வது அல்லது அடமானம் வைப்பது )

(to sell, gift, exchange or mortgage) என்ற வாசகம் இனைக்கப்பட்டுள்ளது. விற்பனை செய்ய அதிலும் வட்டிக்கு அடகுவைக்க எனக்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக சில மாதங்ளுக்கு முன்னர் கலாச்சார அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்களால் இவை எடுத்துக்காட்டப்பட்டபோது, இது வக்பு சட்டத்துக்கு முரணானது என்பதையும் இதை பதிவு செய்ய முடியாது என்பதையும் பொதுமக்களுக்கு திட்டவட்டமாக தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் அவ்வாறு தெரிவித்த உயர் அதிகாரிகள் சிலர், இவ் அறகட்டளையை பதிவு செய்ய முற்படுவதாகவும் இச்சொத்தை விற்பனை செய்வதற்கு மறைமுகமான உதவிகளை அபரிப்பாளர்களுக்கு செய்து வருவதாகவும் இதற்காக சில முஸ்லிம் சட்டத்தரணிகள் சிலர் துணை நிற்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இவ்வறக்கட்டளையான மிகவும் பயங்கரமானது. அபாயகரமானது. இவ்வறக்கட்டளை பதிவு செய்வதன் மூலமாக இச் சொத்தை விற்பனை செய்ய, கைமாற்றம் செய்ய, அடகு வைக்க முடியும், எனவே கபூரியா மற்றும் ஏனைய வக்பு சொத்துக்களுக்கு நடந்த நிலமை இதற்கு நடகக்கக் கூடாது. எனவே இவ்விடத்தில் அகில இலங்கை ஜமீத்துல் உலமா மற்றும்  
புத்திஜீவிகள் அரசியல் தலைமைகள், நல்லுள்ளம் படைத்தவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

-பேருவளை ஹில்மி

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.