பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவி வரும் மோதலை நிறுத்தக் கோரி கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் முன்பாக திங்கட்கிழமை (நவம்பர் 20) மௌனப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டக்காரர்கள் காஸாவில் மோதல் காரணமாக குழந்தைகள் இறப்பதைத் தடுக்க ஐ.நா மற்றும் பிற உலக அதிகாரிகளுக்குத் தலையீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இந்த மௌன ஆர்ப்பாட்டத்தில் சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய காணாமல் போன இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட, “ஐக்கிய நாடுகள் சபையோ ஏனைய நபர்களோ போரை நிறுத்துவதற்கோ சிறுவர்கள், பெண்கள் மற்றும் நோயுற்றவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதிலோ தலையிடவில்லை".