ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டருக்கான காப்புறுதி பணத்தை செலுத்துவதை ஒரு வார காலத்துக்கு இடைநிறுத்துமாறு பிறப்பித்திருந்த உத்தரவை இரத்துச் செய்து கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய நேற்று (15) உத்தரவிட்டார்.
மேலும், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு காப்பீட்டுத் தொகையை வழங்குவதை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என நீதிமன்றம் கருதுவதால், உத்தரவு திரும்பப் பெறப்படுவதாகவும் நீதிவான் தெரிவித்தார்.
தினேஷ் ஷாப்டரின் மரணம் குற்றம் என உறுதி செய்யப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு குறித்த காப்புறுதி நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு நீதிமன்றத்தில் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு முன்னர் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.