விஷம் அருந்திய நிலையில் பாடசாலை வந்த மாணவன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விஷம் அருந்திய நிலையில் பாடசாலை வந்த மாணவன்!


விஷம் அருந்திய நிலையில் பாடசாலைக்கு வந்த மாணவன் ஒருவர் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் (21) அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.


ஹட்டன் பிராந்திய கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் பிரதான தமிழ் பாடசாலையில் 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவன் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


அந்த பாடசாலையின் ஆசிரியர்கள் சிலர் தன்னையும் தனது சகோதரியையும் தொடர்ந்து திட்டியதால் மனமுடைந்த மாணவன் தோட்டத்தில் இருந்த பூச்சிக்கொல்லி திரவத்தை குடித்துவிட்டு பாடசாலைக்கு வந்ததாக வட்டவளை வைத்தியசாலை வைத்தியர்களிடம் மாணவன் தெரிவித்துள்ளார்.


பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மாணவன் பாடசாலைக்கு வந்ததாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களிடம் தெரிவித்ததையடுத்து, ஆசிரியர்கள் உடனடியாக மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.