கொழும்பு வடக்கு குவாஸி நீதிமன்ற நீதிபதி ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் 7,500 ரூபா லஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நீதிபதி கைது செய்யப்பட்டார்.
மாவனெல்லை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நபரொருவரின் இரண்டாவது மனைவியிடமிருந்து சட்டப்பூர்வ பிரிவினையை உறுதிப்படுத்தும் வகையில் முறைப்பாட்டாளரிடம் விவாகரத்து ஆவணங்களை வழங்குவதற்கு 7,500 ரூபா லஞ்சம் கோரியுள்ளார்.
தெமட்டகொடவில் அமைந்துள்ள கொழும்பு வடக்கு குவாஸி நீதிமன்றத்தில் இலஞ்சம் வாங்கும் போதே நீதிபதி இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.