அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர், உப தலைவர் மற்றும் பொருளாளர் ஆகியோர் விளையாட்டு அமைச்சருக்கு எதிராக 2.4 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்தனர்.
இலங்கை கிரிக்கெட் சார்பில் அவர்கள் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.