பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ மற்றும் அவரது இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கண்டி மாவட்ட செயலகத்தில் உள்ள மின்தூக்கிக்குள் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ மற்றும் அவரது இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நேற்று 30 நிமிடம் மின்தூக்கிக்குள் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்ட செயலக கட்டிடத்தில் உள்ள கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சென்று கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்தூக்கியில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான எம்.பி.யும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கட்டிடத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் உதவியுடன் மின்தூக்கியில் இருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்டனர்.