நிதி மோசடி; இவர்களை கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நிதி மோசடி; இவர்களை கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!


நிதி மோசடி தொடர்பில் தேடப்படும் சந்தேகநபர் மற்றும் சந்தேக பெண் தொடர்பிலான தகவல்களை தந்துதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர். 


பத்தரமுல்ல, உடமுல்ல பிரதேசத்தில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான கட்டடத்தை புனரமைத்து  மற்றும் வீட்டுத்தோட்டத்தை சுத்தப்படுத்தி தருவதற்கு 99 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாயை அந்த நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொண்டு, அந்த பணத்து ஏற்றவகையில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளாது மோசடி செய்தனர் என்று படத்தில் உள்ள  இருவருக்கு எதிராகவும் மிரிஹான விசேட குற்றப் பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 


இந்த மோசடியில் ஈடுபட்டிருந்த இருவரும் தெஹிவளை, பெப்பிலியான வீதியில் D Marc Solution (Pvt) Ltd என்ற பெயரில் குத்தகை நிறுவனத்தை நடத்திச் சென்றுள்ளனர்.


இந்த மோசடியாளர்கள் இருவரையும் கைது செய்வதற்கு தேவையான தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வத்தளை, ​ஹெந்தல, காதினால் குரே மாவத்தை இல. 31 என்ற விலாசத்தைச் ​கொண்ட (தேசிய அடையாள அட்டை இலக்கம்- 923394800V) விக்னேஸ்வரன் கணேசன்,


காலி, தங்கெதர, ரிச்மன் சிட்டி ஹிரிபுர குறுக்கு வீதி, இல 04/4 என்ற விலாசத்தைச் கொண்ட (தேசிய அடையாள அட்டை இலக்கம் - 198763501900 ரேவல் நி​ரோஷினி ராஜரட்ணம் ஆகிய இருவரையும் பொலிஸார் தேடுகின்றனர்.


தகவல் தெரிந்தோர் விசேட குற்ற விசாரணைப் பிரிவுக்கு  0718137373 அல்லது 0112852556 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.