சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளமை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சரவை உபகுழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
எதிர்காலத்தில் எந்தவொரு இடைக்காலக் குழுவின் நியமனத்துக்கும் அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்றும் அமைச்சரவை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.