தனிமையில் வீதியில் செல்லும் யாழ். பல்கலைக்கழக மாணவியிடம் ஆணுறுப்பை காட்டி பாலியல் சேட்டையில் ஈடுபடும் நபர் தொடர்பான காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
பல்கலைக்கழக மாணவி ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த காணொளி வெளியாகி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆத்திச்சூடி வீதியில் ஆணுறுப்பை காட்டியவாறு மோட்டார் சைக்கிளில் பல்கலைக்கழக மாணவியை பின்தொடர்ந்த நபரின் தகாத செயலை பல்கலைக்கழக மாணவி ஒருவர் துணிகரமாக காணொளியில் பதிவு செய்துள்ளார்.
காணொளி எடுக்கப்படுவதை அவதானித்த குறித்த நபர் மோட்டார் சைக்கிளை திருப்பிக்கொண்டு செல்வதை காணொளியில் அவதானிக்க முடிகின்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவிகள் விரிவுரைகளை முடித்துவிட்டு, பல்கலைக்கழக விடுதிகளுக்கும் தங்குமிடத்துக்கும் நடந்து செல்லும்போதும் வரும்போதும், வீதியில் வருகின்ற ஒரு சிலர், அந்த மாணவிகளுக்கு ஆணுறுப்பை காட்டி பாலியல் சைகைகளை செய்கின்ற நிலைமை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான தகாத செயல்களை செய்யும் சிலர் கடந்த காலங்களில் கையும் மெய்யுமாக பிடிபட்டு பொதுமக்களினாலும் பல்கலைக்கழக மாணவர்களாலும் நையப்புடைக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இதுபோன்ற ஆபாச செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.