ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்படவுள்ள நீர் வழங்கல் துறையின் புதிய சீர்திருத்த வேலைத்திட்டம் தொடர்பாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும், பிரதம அதிபருமான ஜனாதிபதியின் பணியாளர்கள் சாகல ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த சீர்திருத்த வேலைத்திட்டத்தின் கொள்கை திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பு தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காலநிலைக்கு ஏற்ற, பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் வழங்கல் அமைப்புகளின் நிர்வாகத்தை வலுப்படுத்துதல், நிர்வாகத்திற்கான கொள்கை கட்டமைப்பை வலுப்படுத்துதல், நிலைத்தன்மை, செயல்திறன், மீள்தன்மை மற்றும் நீர் செயல்பாடுகளின் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.
பிரதமர் அலுவலகம், நீர்வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஆகியன இணைந்து இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.