தெஹிவளை பாபக்கர் பள்ளிவாசல் விவகாரத்தில் பள்ளிவாசலை பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்களை பொதுமக்கள் பள்ளிவாசல் பதிவு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சில நாற்களுக்கு முன் கையளித்திருந்தனர்.
இவ் ஆவணங்களில், இதை அன்பளிப்புச் செய்த பாபக்கர் அவர்களகளை சவ்தி அரேபியா ரியாத் நகர காரியாலயத்திற்கு தேடிச் சென்ற ஒரு சகோதரர், அவரின் காரியாலயத்தில் பரிமாறப்பட்ட சில ஆவணங்கள் சம்பாசனைகள் அடங்கிய ஆவணங்களையும் இதன் பதிவுக்கு துணையாக அதிகாரிகளிடம் கையளித்திருந்தனர்.
இவ் ஆவனங்களின் பிரதிகள் மறுகனமே இக்காணியை அபகரிக்க காத்திருக்கும் அபகரிப்பாளர்களின் கைக்குச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன், வழக்கு நடந்து கொண்டிருக்கும் இவ்விடத்திலிருந்து வெட்டி எடுத்துச் செல்லப்பட்ட பல லட்சங்கள் பெறுமதியுள்ள மரங்கள் தொடர்பில் போலீஸ் விசாரணையின் போது இவர்கள் பொலிஸாரிடம் இவற்றை இவர்கள் காண்பித்தது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இவ் ஆவணத்தில் பிரதிகளை சில மீடியாக்களுக்கு ஜமீயதுல் உலமாவின் உப செயலாலர்களில் ஒருவர் வழங்கியதாகவும் அறிய முடிந்தது.
பள்ளிவாசல் பதிவிற்க்கு தேவையான ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்கு, பொதுமக்கள் பள்ளிவாசல் பதிவுகளில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கும் திணைக்களங்களுக்கும் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் படி ஆவணங்களை பெற்றுக்கொள்ள விண்ணப்ப கடிதங்கள் கையளித்து இரண்டு மாதங்கள் ஆன நிலையிலும் அதற்கான எந்த பதிலும் அவர்களால் வழங்கப்படவில்லை.
பள்ளிவாசலை அபகரிப்பாளர்களிடமிருந்து காப்பாற்ற பாடுபடும் தரப்புக்கு இரண்டாம் தர கவனிப்பும், பள்ளிவாசலை விற்பனை செய்ய முயற்சிகள் செய்வோருக்கு செங்கம்பள வரவேற்புமா ?அமானிதங்களை பாதுகாக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் இலட்சணம் இதுதான ?
இவர்களிடம் இந்த இறை இல்லத்திற்கு நியாயம் கிடைக்குமா ?
மேலும் இந்த விசாரணையின் போது, பள்ளிவாசலின் பெயர் பலகையை தாமே உடைத்தெறிந்ததாகவும், இது பள்ளிவாசல் அல்ல என்றும், உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என இவர்கள் வாதாடியதோடு, இது சம்பந்தமாக போலீஸ் நிலையத்தில் ஆஜரான
பொது மக்களை பார்த்து ஸஹ்ராணின் நண்பர்கள் என்றும், ஸஹ்ரானுடன் சேர்ந்து குண்டு வைத்தவர்கள் என்றும் மிகவும் அடிமட்ட நிலையிலிருந்து இவர்கள் உயர் பொலீஸ் அதிகாரி முன்னிலையில் திட்டித்தீர்த்தனர்.
இச்சம்பவங்களின் பின்னர் இதற்காக உழைக்கும் ஒரு வறிய சகோதரரின் வீட்டிற்கு உயர் பாதுகாப்பு தரப்பிலிருந்து குறிப்பிட்ட சகோதரரை தேடி வந்ததும், விசாரணைகளின் பின்னர் நிலமையை உணர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் விடயத்தை விளக்கி அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
கடந்த காலங்களில் திட்டமிட்டு செய்யப்பட்ட முஸ்லிம் சமூகத்தின்மீதான தாக்குதல்கள், கரை படிந்த வரலாறுகள் மிகுந்த கவலைக்குரியவை. இது போன்ற நிலைமைகள் நாட்டில் ஒருபோதும் ஏற்படக்கூடாது என்பதே நம் அனைவரினதும் பிரார்த்தனைகளாகும். இவ்வாறான நிலைகளின் போது அப்பாவி மக்கள் பட்ட துன்பங்கள், பட்ட துயரங்கள், வடித்த கண்ணீர் அத்தனையும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
இந்நிலையில் இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் உலமாக்கள். உலமா தலைவர்கள். மார்க்க அறிஞர்கள். முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க வேண்டிய முக்கிய அமைப்புக்களின் செயலாளர்கள். இவர்கள் தங்களது குறுகிய நோக்கத்தை அடைந்து கொள்ள, அப்பாவி பொதுமக்கள் மீது இவ்வாறான அபாண்டங்களை சுமத்தி, அருவருக்கத்தக்க விதமாக, அந்த நெருப்பில் குளிர்காய முயற்சிப்பதையும், கேவலமான நடந்து கொள்வதையும் தவிர்ந்து கொள்ள வேண்டும். ஏழைகளின் கண்ணீரில் இருந்தும், சாபங்களிலிருந்தும் இவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இவர்களின் இவ்வாறான அத்துமீறிய அதிகாரங்களுக்கு காரணமும், பின் நிற்பதும், துரோகத்தனமான நடந்து கொள்ளும் இவ்வாறான அதிகாரிகளின் கை கொடுப்புத்தானா என மக்கள் வினா எழுப்புகின்றனர் ?
இந்நிலையில் ஒரு பள்ளிவாசலை பதிவு செய்வதற்காக கையளிக்கப்பட்ட ஆவணங்கள் பள்ளிவாசல் அல்ல என வாதாடும் கூட்டத்தினரிடம் மறுகணமே சென்றடைவது மிகவும் வேதனையாளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பள்ளிவாசல்களை பதிவு செய்தல் வக்பு செய்தல் அதற்கு நம்பிக்கை பொறுப்பாளர்களை நியமித்தல் போன்ற செயல்களுக்கு கலாச்சார அமைச்சும் வக்பு சபை ஆகிய இரு பிரிவுகளே சம்பந்தப்படுகின்றன.
எனவே இதற்குரிய முக்கிய ஆவணங்கள் பொதுமக்களால் இவர்களிடமே கையளிக்கப்பட்டது. இவ்விரு நிறுவனங்களும் பொறுப்பு கூற வேண்டிய
அமானிதங்களை பாதுகாக்க ஸ்தாபிக்கப்பட்ட பொறுப்புடன் செயல்பட வேண்டிய நிறுவனங்களாகும்.
இந்நிலையில் அமானிதத்தை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளிடமே அமானிதம் இல்லையெனில் மேற்படி துப்பாக்கிய நிலையை யாரிடம் சொல்வது என இதற்காக உழைக்கும் மக்கள் அங்களாய்க்கின்றனர்.
இதற்கான விசாரணை ஒன்றை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் அதிகாரிகளிடம் கடிதங்களை கையளித்திருந்தாலும் அதன் நம்பிக்கை தன்மை பற்றியும் கவலைப்பட வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் பள்ளிவாசல்களில் நம்பிக்கை பொறுப்பாளர்கள் நியமிப்பதில் ஏற்பட்ட மோசடிகளையும், அதனால் சில பள்ளிவாசல்களில் ஏற்பட்ட கைகலப்புகளையும் மீடியாக்கள் மூலம் நாம் அறிந்து கொண்டோம்.
இவ்வாறாக பொறுப்பான அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் நடக்கும் போது பள்ளிவாசல்களில் குழப்ப நிலை ஏற்படுவதை தடுக்க முடியாது என்பதே உண்மை. அவ்வாறான குழப்பங்களுக்கு இவ்வாறான பொறுப்புள்ள சபைகளில் பொறுப்பற்ற முறையில் செயற்படும் அதிகாரிகளே காரணம் என்பதையும் விளங்க முடிகின்றது.
-பேருவளை ஹில்மி