கண்டி மாவட்டத்தின் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பல வீதிகள் மழையினால் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு காரணமாக கண்டி, மடுல்கலை பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பாலம் உடைந்துள்ளதால் ஹதரலியத்த, தும்கும்புர வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொல்வத்த, மாவத்தகம, மினிகமுவ உள்ளிட்ட பல பிரதேசங்களில் உள்ள மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக யாழ் நியூஸ் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர, மண்சரிவு அபாயம் காரணமாக பல இடங்களில் பாதுகாப்பற்ற நிலையில் தங்கியிருந்த பல குடும்பங்கள் அந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.