மௌலவி அப்துல் ஹமீத் அவர்கள் தமிழ் சமூகத்திடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மௌலவி அப்துல் ஹமீத் அவர்கள் தமிழ் சமூகத்திடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்!


கடந்த சில வாரங்களுக்கு முன் சில பாடசாலைகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.

இக் கொண்டாட்டத்தில் சில முஸ்லிம் பாடசாலைகளில் நடந்தேறிய நிகழ்வுகள் சமூக வலைத்தளங்களில் பதியப்பட்டிருந்தது. இதிலும் சில முஸ்லிம் பாடசாலைகளில் ஆசிரியைகளும் ஆசிரியர்களும் ஒன்றாக நடனமாடிய காட்சிகளும் இதில் வெளியாகி இருந்தன.

இவை கண்டிக்கப்பட வேண்டும். இஸ்லாமிய மார்க்க, கலாச்சாரத்தை பொருத்தவரையில் இச்செயல், நாம் பின்பற்றும் மார்க்கத்திற்கு விரோதமானது. முஸ்லிம் பாடசாலைகளில் இது நடந்திருக்கக்கூடாது. இதில் மாற்று கருத்து இல்லை.

மேலும் இது சம்பந்தமாக சமூகத்திற்கு அவ்வப்போது தேவையான ஆலோசனை வழங்குவது, கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிப்பது
போன்றவை மார்க்க அறிஞர்களான சமூக வழிகாட்டிகளின் கடமையாகும். இது கட்டாயம் செய்யப்பட வேண்டும்.

அதேவேளை நம் சமூகத்தில் சில பாடசாலைகளில் செய்த தவறுக்காக எமது சகோதர சமூகத்தின் கலாச்சாரங்களை எடுத்துக் காட்டி அவற்றைத் தாக்குவது முற்றிலும் தவறானதாகும்.

ஆசிரியர் தினத்தன்று சில முஸ்லிம் பாடசாலைகளில் ஆடல் பாடல் அரங்கேற்றங்கள் நடைபெற்ற போதிலும், எந்த முஸ்லிம் பாடசாலைகளிலும் பரதநாட்டியம் ஆசிரியர் தினத்திற்காக ஆடப்பட்டது என்ற செய்திகள் கிடைக்கவுமில்லை. அவ்வாறு ஆடப்படுவதும் இல்லை.

 அவ்வாறு ஆடப்பட்டாலும் "இவை எமது மார்க்க விழுமியங்களுக்கு முறனானது. எனவே ஆசிரிய ஆசியைகளே முஸ்லிம் பாடசாலைகளில் இவை தடுக்கப்படவேண்டும்" என உரிய விதத்தில் உரிய முறையில் எடுத்துக் கூறியிருக்கலாம்.

பரத நாட்டியம் என்பது அவ்வாறு ஆடவும் முடியாது. இது நீண்ட காலமாக பழகி கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு கலையே அதுவாகும்.

பரத நாட்டியம் தமிழ் இந்து மக்களின் ஒரு கலாச்சாரமாகும். அவர்களின் கலாச்சாரப்படி அது ஒரு உயர்வான கலையாக பேணப்பட்டு வருகின்றது.
ஒரு பிள்ளையின் பரத நாட்டிய முதல் அரங்கேற்றம் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு அவர்களின் கலாச்சாரப்படி ஒரு மேலான உயர்வான அவர்கள் மதிக்கத்தக்க ஒரு விழாவாக கொண்டாடப்படுகின்றது. அதை ஆரம்பித்துவைக்க அவர்கள் உயர்வாக மதிக்கும் ஒருவர் அழைக்கப்படுவார்.

இந்த நடனம் தென் இந்திய கலாச்சாரங்களில் ஒன்றாகும். இதில் ஆடுபவர்கள் மிகப் பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின்  கடவுளான சிவன், நடராசர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியதாக அவர்களின் நம்பிக்கையாகும். சிவபெருமான் ஆடும் நடனம் என்றும் அவர்களின் புரானங்களில் சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் என்றும் அவர்களின் நம்பிக்கை உள்ளது.

சில நண்பர்களின் பிள்ளைகளின் பரதநாட்டிய அரங்கேற்ற விழாவிற்காக நானும் அழைக்கப்பட்டுள்ளேன். மிக கௌரவமாக அவர்களின் சமயப்படி வெற்றிலையின் மேல் அழைப்பிதழை வைத்து சங்கையாக அழைத்தார்கள். அது நமது மார்க்க கலாச்சாரத்துக்கு விரோதமானது என்பதனால் அவர்களின் மனம் நோகாத விதத்தில் அவர்களிடம் சொல்லி அதில் இருந்து தவிர்ந்து கொண்டுள்ளேன்.

அவ்வாறான அவர்களின் கலாச்சாரப்படி உயர்வான ஒரு கலாச்சார முறையை, நம் சமூகம் செய்ததற்கா அந்த வழிமுறையை நாம் காலுக்கு கீழ் போட்டு மிதிப்பது முற்றிலும் தவராகும். எமது சமூகம் செய்த தவறுக்காக அடுத்த சமூகம் தண்டிக்கப்படக் கூடாது. 

சன்முகா இந்துக் கல்லூரியில் எமது பர்தா அவமதிக்கப்பட்டதற்காக எமது உரிமை மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக நாம் நீதி மன்றம் வரை சென்றோம். அவர்கள் வரும்பவில்லை என்பதற்காக அதை மறுக்க அவர்களுக்கு உரிமை இல்லை என்பற்காக போராடினோம்.

நாட்டில் சகல இனத்தவர்களினதும் அவரவர் கலசாச்சார மார்க்க விழுமியங்கள் மதிக்கப்பட வேண்டும்.

நாட்டில் இனவாதம் நிலவிய காலப்பகுதிகளில் சில இனவாதிகளால் எமது கலாச்சார விழுமியங்கள் தாக்கப்பட்ட போது நாம் எந்த அளவு தூரம் ஆத்திரப்பட்டோம். அதே போன்றே ஏனைய சமூகத்திற்கும் வலியும் வேதனையும் உண்டு என்பதை நாம் தெரிந்து நடக்க வேண்டும்.

இவரின் இந்த உறையின் மூலம் இந்து சகோதரர்களுக்கு முஸ்லிம் மக்கள் மீது ஒரு வெறுப்பும் குரோதமும் தவறான பார்வையும் ஏற்படுகின்றதே தவிர நல்லெண்ணம் ஏற்படுவதில்லை.

சில நற்புடன் பழகும் பாடசாலை மாணவியர்களுக்கு இதன் மூலம் முஸ்லிம் மாணவியர்கள் ஒரு எதிரியாக தெரிய வாய்ப்புள்ளது. நட்புடன் பழகும் அயலவர்கள் முஸ்லிம்களைப் பற்றி சில தப்பான என்னங்களை வளர்க்க இது போன்ற நிகழ்வுகள் வழி வகுக்கும்.

எனவே நடந்த தவறை ஏற்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதே அவர்களின் மனதிற்கு ஏற்பட்ட நடந்த காயங்களுக்கு ஒரே மருந்தாகும்.

எமது மார்க கேற்பாடுகளின் படி தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேன்பவனும் அதை மன்னிப்பவனும் மனிதர்களில் உயர்வானவன். எனவே நாம் பின்பற்றும் உயர்வான மார்கத்தின் உயர்வை எடுத்துக் காட்டுவதில் நாம் முன் நிற்க வேண்டும். 

-பேருவளை ஹில்மி

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.