பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு இவ்வாறு நான்காவது முறையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சேவை நீடிப்பு வழங்கப்படுகின்றது.
முன்னதாக, மூன்று மாதங்கள் என்ற அடிப்படையில் இரண்டு முறையும், மூன்று வாரங்கள் சேவை நீடிப்பு ஒரு முறையும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டிருந்தது.
இறுதியாக வழங்கப்பட்ட மூன்று வார கால சேவை நீடிப்பு நேற்றுடன் (02) முடிவடைந்த நிலையிலேயே ஜனாதிபதி இவருக்கு மீண்டும் சேவை நீடிப்பை வழங்கியுள்ளார்.
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களின் பிரகாரம் இவ்வாறு சேவை நீடிப்பை வழங்கியுள்ளார்.