இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
அனுமதி வழங்குவதற்காக வர்த்தகர் ஒருவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் உட்பட மூவர் கடந்த வெள்ளிக்கிழமை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.