குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் எதிர்வரும் நவம்பர் மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
போலி ஆவணத்தை தயாரித்து சந்தேக நபரொருவரின் வெளிநாட்டு பயணத் தடையை நீக்கியதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் மற்றுமொரு சந்தேக நபரும் கோட்டை நீதவான் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.