அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) இன்று முன்னிலையாகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் இன்று (14) பிற்பகல் 2.00 மணியளவில் குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதனை, கோப் குழுவின் தலைவர் எம்.பி.ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்
முன்னதாக, பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான கோப் குழு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தலைமையிலான கோப் குழு முன்னிலையில் இலங்கை கிரிக்கெட் அழைக்கப்பட்டிருந்தது.