தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் கொலை; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் கொலை; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!


கழுத்து மற்றும் முகம் அழுத்தப்பட்டதன் காரணமாகவே தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் உயிரிழக்க நேர்ந்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 


கொழும்பு நீதிவான் நீதிமன்றமே இன்று (01) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.


இதன்மூலம் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாகத் தீர்ப்பளித்த மேலதிக நீதிவான், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.


மரண விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கைகள் என்பனவற்றை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதிவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.