இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று இந்தியா அஹமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது.
ஐம்பது ஓவர்கள் முடிவில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 240 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்த்தது.
இம்முறை உலகக்கிண்ண போட்டிகளில் இந்திய அணி சகல விக்கட்டுகளையுல் இழந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்
இந்திய அணி சார்பாக விராத் கோலி மற்றும் லொகேஷ் ராஹுல் அரைச்சதம் பெற்றனர்.
பந்து வீச்சில் மிச்சல் ஸ்டார்க் 3 விக்கட்டுகளையும், பெட் கமின்ஸ் மற்றும் ஹெஸ்ல்வுட் தலா இரு விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.
அவுஸ்திரேலியா அணிக்கு 241 என்ற வெற்றி இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது.