மட்டக்களப்பு – சந்திவெளி, சித்தாண்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த 6 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டி பகுதியில் தொடர்ச்சியாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த போராட்டத்துக்கு யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் இன்றைய தினம் ஆதரவு தெரிவிக்கும் வகையில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்தநிலையில், சட்டவிரோதமான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் பொதுப்போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுகளில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.