ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 இன் குற்றச்சாட்டுகள் குறித்து சட்டமா அதிபர் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று (14) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமியின் வாய்மூல கேள்விக்குபதிலளிக்கும் போது 'சனல் 4 அறிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சட்டமா அதிபர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார். எனினும் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பது தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து இதுவரை தெரியவில்லை' என அமைச்சர் தெரிவித்தார்.