தெனியாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகம பிரதேசத்தில் பிக்கு ஒருவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெனியாய பொலிஸில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் 37 வயதுடைய திருமணமானவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர், பிக்குவின சகோதரியுடன் தொடர்பு வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் பல்லேகம, கங்கொட வீதியில் அமைந்துள்ள சம்போதி முதியோர் இல்லத்திற்கு அருகில் நடைபெற்றுள்ளது.
இருவருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் பொலிஸ் உத்தியோகத்தரிக் கழுத்து பகுதியில் பிக்கு சரமாரியாக தாக்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 18 வயதுடைய பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெனியாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.