15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆங்கில பாட ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு ஆங்கிலம் கற்பிப்பதற்காக சென்ற போதே, ஆசிரியர் சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹொரனை பகுதியை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.