சிங்கப்பூரில் இருந்து பெர்த் (அவுஸ்திரேலியா) நோக்கி சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறைந்த கட்டண விமான நிறுவனமான ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிஆர் 16 என்ற விமானம் சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 04.10 மணிக்கு தனது பயணத்தை தொடங்கியது.
சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு, சந்தேக நபர் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறினார்.
பின்னர் 02 போர் விமானங்களின் பாதுகாப்புடன் விமானம் சிங்கப்பூருக்கு திருப்பி விடப்பட்டது.
கைது செய்யப்பட்ட அவுஸ்திரேலியர் 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எனினும், விமானத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கிடைக்கவில்லை.