மாத்தறையில் உள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக கடமையாற்றிய மலம்படை மற்றும் வல்கம பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம், நேற்று (09) காலை வீட்டு உரிமையாளர் வீட்டை விட்டு வெளியேறி மாலையில் வீடு திரும்பிய போது இரு வீட்டுப் பணிப்பெண்களையும் காணவில்லை என சம்பவம் தொடர்பான முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உரிமையாளர் எந்த பதிலும் வராமல் அவர்களின் பெயர்களை அழைத்ததாக கூறப்படுகிறது.
வீட்டின் பின்பக்க கதவு திறந்திருந்ததையடுத்து, பணிப்பெண்கள் இருவரும் வீட்டில் இல்லாததால், உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
பொலிஸார் நடத்திய விசாரணையில், 67 மற்றும் 70 வயதுடைய இரு பெண்களும், பணிப்பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட குளியலறை மற்றும் கழிவறை பகுதிகளில் படுகொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இதன்போது அறை அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்கம் அல்லாத 12 வளையல்கள், 02 அட்டியல்கள், ஒரு தங்க கரண்டி, 39 வெளிநாட்டு நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பெறுமதியான பொருட்கள் காணாமல் போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் மாத்தறை, துடாவ பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் வசம் இருந்த திருடப்பட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.