சிங்கள திரைத்துறையின் பிரபல நடிகர் ஜக்சன் அன்டனி தனது 65 ஆவது வயதில் காலமானார்.
வாகன விபத்தொன்றில் காயமடைந்த நிலையில், கடந்த 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஜக்சன் அன்டனி இன்று (09) அதிகாலை காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
1958ஆம் ஆண்டு ராகமையில் பிறந்த ஜக்சன் அன்டனி பல சிங்கள மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படமொன்றின் படப்பிடிப்புக்காக அனுராதபுரத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, தலாவ – மொரகொட பிரதேசத்தில் அவர் பயணித்த கெப் வாகனம் யானையொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த ஜக்சன் அன்டனி அநுராதபுரத்திலிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார்.