பல எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப்பெண்களாக செல்லும் இலங்கையர்கள் நாளாந்தம் பல துன்பங்களை அனுபவிக்கும், சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன.
இதற்கமைய, சவூதி அரேபியாவிற்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண்ணொருவர், அங்கு வீட்டு உரிமையாளரின் மனைவியினால் துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண், வீட்டு உரிமையாளரின் மனைவியினால் பெற்றோல் ஊற்றி, தீ வைக்கப்பட்டு எரிகாயங்களுடன் நாடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொத்தடுவ புதிய நகரைச் சேர்ந்த 45 வயதுடைய நயனா தில்ருக்ஷி என்ற பெண்ணே இந்தச் சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.
சுமார் 7 மாதங்களுக்கு முன்னர் தான் இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தை தான் எதிர்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.