காசா மோதல் தொடர்பான விவாதம் இலங்கைப் பாராளுமன்றத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) நடைபெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று தெரிவித்தார்.
சில பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் போது, குறித்த விடயம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை கட்சித் தலைவர்கள் இன்று மேற்கொள்வர் என சபாநாயகர் தெரிவித்தார்
அத்துரலியே ரத்தன தேரர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் சபையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் எனவும், இதன் காரணமாக இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சபைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.