நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இரண்டு நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாண கல்வி, காணி அபிவிருத்தி, நெடுஞ்சாலைகள் மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் விசேட அறிவிப்பொன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அந்த மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளையும் (09) நாளை மறுதினமும் மூடப்படவுள்ளன.
தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலி கமகேவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இரண்டு நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாண கல்வி, காணி அபிவிருத்தி, நெடுஞ்சாலைகள் மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் விசேட அறிவிப்பொன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அந்த மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளையும்(9) நாளை மறுதினமும் (10) மூடப்படவுள்ளன.