இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த 7ம் திகதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், "ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீன மக்களுக்குப் பின்னால் சென்று ஒளிந்துகொண்ட கோழைகள்" என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடுமையாக சாடியுள்ளார்.
மேலும் காசா மக்களுக்கு உணவு உள்ளிட்ட பிற தேவையான பொருட்களை வழங்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ஆதரவளித்து வரும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.