தனியார் நிறுவனத்தில் பெண் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதனையடுத்து சந்தேகத்தின் பேரில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகொட பகுதியில் தனியார் நிறுவனமொன்றில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (14) விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்படி நேற்று இரவு கந்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லிப்டன் வீதி, நாகொட பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தானை, நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய தம்பதியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் உறவினர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.