அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற்ற பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றமற்றவர் என சிட்னி நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க 11 மாதங்களுக்குப் பின்னர் இன்று () இலங்கை திரும்பவுள்ளார்.
32 வயதான தனுஷ்க குணதிலக்க, நவம்பர் மாதம் டிண்டர் மூலம் அறிமுகமாக சிட்னி பெண் ஒருவரை அவரது வீட்டில் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
கடந்த வாரம், சிட்னியின் டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற நீதிபதியினால் குணாதிலக விடுதலை செய்யப்பட்டார்.
எட்டு டெஸ்ட் போட்டிகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய குணதிலக்க கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கிரிக்கெட்டில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டதையடுத்து, தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடையை நீக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை முன்னதாக தெரிவித்திருந்தது.
கடந்த ஆண்டு, கிரிக்கெட் வீரர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆஸ்திரேலிய பெண் ஒருவர் குற்றம் சாட்டியதை அடுத்து, தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டபோது, இலங்கை கிரிக்கெட் சபை காலவரையற்ற தடையை விதித்தது.
"முடிவெடுத்தபின், தடை நீக்கப்பட்டால் அவர் மீண்டும் இலங்கையில் கிரிக்கெட் விளையாட முடியும்" என்று இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.