பாராளுமன்றத்தில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே சபைக்கு வந்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தம்மை தாக்கியதாக தெரிவித்தார்.
இது பாரதூரமான சம்பவம் எனவும் இது தொடர்பில் விசாரணை நடத்த பாராளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்தே சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
அப்டேட் : தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (20) உத்தரவிட்டார்.
அதற்காக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.