பொலிஸ் சார்ஜன்ட் ஹனீபாவின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணை மேற்கொண்டு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு ஐக்கிய காங்கிரஸ் கட்சி பொலிஸ் மாஅதிபர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளது.
மேற்படி விடயமாக, மேல் பெயர் குறிப்பிடப்பட்ட பொலீஸ் உத்தியோகத்தர் பொலிஸ் விடுதியில் கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொல்லப்பட்டதாக அவரது மரணம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பதிக்கப்பட்ட குடும்பத்தினர் எமது கட்சியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
எனவே இது தொடர்பில் நீதியான விசாரணை செய்யப்பட்டு நீதி கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
பொலநறுவை வெலிக்கந்தைப் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஆக கடமையாற்றி வந்த ஏறாவூரைச் சேர்ந்த மக்பூல் முஹம்மது ஹனீபா (வயது 52) என்பவரின் சடலம் பொலிஸ் விடுதியிலிருந்து இரத்த வெள்ளத்தில் தோய்ந்தவாறு கடந்த சனிக்கிழமை (30) மீட்கப்பட்டிருந்தது.
பொலநறுவை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம் செவ்வாய்க்கிழமை 03.10.2023 சட்ட வைத்திய நிபுணரினால் உடற்கூராய்வு செய்யப்பட்டதன் பின்னர் அன்றைய தினம் இரவு ஏறாவூர் காட்டுப்பள்ளி மையவாடியில் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சடலம் இரத்த வெள்ளத்தில் தோய்ந்திருந்ததை வைத்தும் சடலத்தில் காயம் இருந்ததனாலும் இது கொலையாக இருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் தெரிவித்திருந்த நிலையில், கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டதில் இரத்தப் போக்கு இடம்பெற்று மரணம் சம்பவித்திருப்பதாக பொலநறுவை சட்ட வைத்திய நிபுணர் யூ.எல்.எம்.எஸ்.பெரேராவின் உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுநேர பொலிஸ் பாதுகாப்பிலுள்ள வெலிக்கந்தைப் பொலிஸ் வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ள பொலிஸார் தங்கும் விடுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக கரிசனை எடுக்குமாறு தங்களிடம் தாழ்மையாக கேட்டுக் கொள்கின்றேன்.
இது விடையாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் ஏறாவூர் நகர சபையின் முன்னால் தவிசாளருமான S.S.M. சுபைர் B.A இராஜாங்க அமைச்சர் டிரான் அலஸ் அவர்களுடன் தான் பேசியள்ளதாகவும் கௌரவ இராஜாங்க அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததாகவும் தெரிய வருகிறது.
தலைவர்
முபாரக் அப்துல் மஜீத்
ஐக்கிய காங்கிரஸ் கட்சி