இன்று (15) நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் 337,956 பரீட்சார்த்திகள் 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது. பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.