காத்தான்குடி 06 பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மௌலவி ஒருவர் தடியால் சிறார் ஒருவரை உடல் ரீதியாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (28) இரவு மதரசா பள்ளிவாசலில் பாடம் நடத்திக் கொண்டிருந்த 08 வயதுக் குழந்தையை மௌலவி உடல் ரீதியாகத் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளார்.
காயமடைந்த நிலையில் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
மௌலவி காத்தான்குடி 06 பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வகுப்புப் பாடமாக ஒதுக்கப்பட்ட பாடத்தை மனப்பாடம் செய்யத் தவறியதால் மௌலவி குழந்தையை உடல் ரீதியாகத் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)