காதலியுடன் தான் நீங்கள் வந்துள்ளீர்களா என்று ஊடகவியலாளர் நாடு திரும்பிய தனுஷ்கவிடம் கேட்டதற்கு, நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று தனுஷ்க வினவினார். அதற்கு அவர்கள் நீங்கள் காதலியுடன் தான் வந்துள்ளீர்கள் எனக்கூற, நீங்கள் நினைப்பது போன்றே எடுத்துகொள்வோம் என தனுஷ்க சிரித்தவாறு கூறினார்.
அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, குற்றமற்றவர் என அவுஸ்திரேலியாவின் டவுனிங் ஸ்ட்ரீட் நீதிமன்றத்தினால் நிரபராதியென தீர்ப்பளித்து விடுவிக்கப்பட்டட நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு (02) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-607 இல் செவ்வாய்க்கிழமை (03) இரவு 10.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இவருடன் அவரது நண்பரும் ஒரு வெளிநாட்டு பெண்ணும் வருகை தந்தனர்.
தனுஷ்க குணதிலக்க விமான நிலைய முனையத்தில் ஊடகங்களுடன் உரையாற்றுகையில்,
இந்த பதினோரு மாத காலமாக அவுஸ்திரேலியாவிலும் இலங்கையிலும் தன்பக்கம் பக்கச்சார்பாக இருந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
அத்துடன், கிரிக்கெட் பயிற்சியும் அதிலிருந்து கிடைத்த விவேகமும் இந்த நேரத்தில் பொறுமையாக இருக்க எனக்கு உதவியது என்றும் இலங்கையில் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு தேவையான பயிற்சிகளில் விரைவில் ஈடுபடவுள்ளதாக ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
என்மீது நம்பிக்கை வைத்த அன்பு செலத்திய அனைவருக்கும் நன்றி. என்னை நம்பிய சிலர் இலங்கையில் இருந்தார்கள் அவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேபோன்று முக்கியமாக கடந்த 10, 11 மாதங்களாக எனக்கு உதவியவர்ளுக்கு நன்றி கூற வேண்டும். அதேபோன்று கிரிக்கெட் நிறுவனத்திற்கும் நன்றி கூறுகின்றேன்.
நான் பிழையானவரா சரியானவரா என என்னை மட்டுமன்றி எவரைப் பற்றியும் யோசிப்பதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது. நான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என எனது முகாமையாளருடன் கதைக்க வேண்டும். நான் மீணடும் பயிற்சிகளை ஆரம்பிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.
ஏனையோர் என்ன கூறுகின்றார்கள் என எனக்குத் தெரியாது எனக்கு முடிந்தவரையில் நான் பயிற்சியை ஆரம்பிப்பேன். அனைவரும் என்னை நம்பினார்கள் அதேபோன்று அன்பு செலுத்தினார்கள் என நான் நினைக்கின்றேன். அதற்கு நான் நன்றி கூறவேண்டும்.
ஆசியக் கிரிக்கெட் தொடர் மற்றும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்களில் விளையாட முடியாமல் போனது எனக்கு பெரும் கவலை தான். எதிர்காலத்தில் என்னால் கிரிக்கெட் விளையாட முடியும். எனக்கு தற்போது வயது 32. பார்ப்போம் என்றார்.
காதலியுடன் தான் நீங்கள் வந்துள்ளீர்களா என்று ஊடகவியலாளர் கேட்டதற்கு, நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று தனுஷ்க வினவினார். அதற்கு அவர்கள் நீங்கள் காதலியுடன் தான் வந்துள்ளீர்கள் எனக்கூற, நீங்கள் நினைப்பது போன்றே எடுத்துகொள்வோம் என தனுஷ்க சிரித்தவாறு கூறினார்.
சம்பந்தப்பட்ட பெண் தொடர்பில் இழப்பீடு கோரி வழக்கெதுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர் கேட்டதற்கு, அவுஸ்திரேலியாவில் சட்டம் வேறுபட்டது. துரதிர்ஷ்டவசமாக குறித்த பெண் தொடர்பில் இழப்பீடு கோர முடியாது. எனினம் அவர்களுடைய மாநிலத்தில் சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்ய எதிர்பார்க்கின்றோம் என்றார்.