தெஹிவளைப் பகுதியில் 25 வருடங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவை சேர்ந்த சகோதரர் ஒருவரால் வாங்கி பள்ளிவாசலூக்காக வங்கி அன்அபளிப்புச் செய்யப்பட்ட காணியை ஜமீயதுல் உலமாவின் செயலாளர்களில் ஒருவரும், மற்றும் சில உலமாக்களும் அபகரிக்க முற்படுவது சம்பந்தமான செய்திகள் தமிழ் மொழிமூல முஸ்லிம் மீடியாக்கள் மூலம் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்த சுமார் 50 கோடி ரூபா பெருமதி வாய்ந்த இந்த இடத்தை
ஒரு பள்ளிவாசலின் இடமாக, போதுச் சொத்தாக பதிவு செய்ய சில அரசியல் தலைவர்கள், புத்தி ஜீவிகள், ஜமீயதுல் உலமாவின் தலைவர் உற்பட முக்கியஸ்தர்கள் பலர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த இடம் சம்பந்தமாக சகல உண்மையான தரவுகளும், தஸ்தாவோஜிகளும், இலங்கை வக்பு சபையிடமும், முஸ்லிம் கலாச்சார பண்பாட்டு அலுவல்கள் அதிகாரிகளிடமும் பொதுமக்கள் சமர்ப்பித்துள்ளனர்.
மேலும் கலாச்சார அமைச்சரை சந்தித்த பொதுமக்கள் இது சம்பந்தமான அத்தனை உண்மைகளையும், இக்காணி தொடர்பாக செய்யப்பட்டுள்ள திருட்டுத் தனமான திருத்தங்கள் சம்பந்தமாகவும் கலாச்சார அமைச்சருக்கு பொதுமக்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
இதைத் தொடர்ந்து கலாச்சார அமைச்சர் இவ்விடத்தை ஒரு பள்ளிவாசலாக பதிவு செய்து, இதை விற்பனை செய்ய முயற்சித்தவர்களுக்கு எதிராக விசாரணை ஒன்றை நடத்தும் படியும் கலாச்சார அமைச்சின் பணிப்பாளருக்கு MP/HO/MIN-3 2023.09.16 கடிதப்படி எழுத்து மூலமான உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
இந்நிலையில் முஸ்லிம் சமய கலாச்சார பண்பாட்டு அலுவலர்கள் அதிகாரிகள் சிலர் இதை பதிவு செய்ய முற்பட்டதோடு, மேலும் சிலர் காணி அபகரிப்பாளர்களுக்கு விலை போய் உள்ளனரா என மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
இக்காணி விவகாரத்தில் எந்தவிதமான உரிமையும், சம்பந்தமும் இல்லாத NGOவுக்கு சொந்தமான இடம் என்றும், இதற்கான உறுதியான உறுதி பத்திரங்கள் அவர்களிடம் உள்ளதாகவும், அப்பட்டமான போலியான அறிக்கைகளை கலாச்சார அமைச்சரிடம் முஸ்லிம் சமய கலாச்சார பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் சிலர் கலாச்சார அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளனர்.
மேலும் இப்பள்ளிவாசலை பதிவு செய்து தரும்படி 31. 12. 2012 ஆம் அண்டு மக்கள் விண்ணப்பம் அனுப்பி இருந்த போதும், அதற்கு எந்தவித பதிலும், ஒரு கடிதத்துண்டும் மக்களுக்கு அனுப்பாத இஸ்லாமிய கலாச்சார தினைக்களம், அதில் இருந்து ஆறு வருடங்களின் பின் 12. 09. 2018 ஆம் ஆண்டு MRCA/WD/C/NR/01 இலக்க கடிதம் மூலம் அக்காலப்பகுதியில் பதவியில் இருந்த கலாச்சார அமைச்சின் பணிப்பாளர் மலிக் அவர்கள், நீதிமன்றத்திற்கு கையளிப்பதற்காக இப்பள்ளி வாசல் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல் அல்ல என குறிப்பிட்ட உலமாக்களுக்கு கடிதம் ஒன்றை வழங்கினார். பள்ளிவாசல்களையும் பொதுச் சொத்துக்களையும் பாதுகாக்க நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகளின் இலட்சணம் இதுதான என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 25 வருடங்களாக இதை இப்பகுதி மக்கள் பள்ளிவாசலாக பதிவு செய்ய கஷ்டப்படவதாகவும், தாம் பெருமையை இழந்துவிட்டதாகவும், இது உள் வீட்டுப் பிரச்சினை, மற்றும் இவ்விடயத்தில் ஜமீயதுல் உலமாவின் செயலாளர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதால் இரகசியங்களை இதுவரையில் பாதுகாத்ததாகவும் விரைவில் இதற்கான தீர்வு கிடைக்காத பட்சத்தில், முஸ்லிம் அதிகாரிகள் உலமாக்கள் உண்மைக்கு மாற்றமாக செயற்படுவார்களாயின், அடுத்துவரும் நாற்களில் மாற்று மொழிமூல மீடியாக்கல் யூடீப் சனல்கள் மூலமும் அத்தனை திருட்டுக்களும் நாடவில் வெளியிடப்பட்டும் எனவும் எச்சரிக்கை விடுதுள்ளனர்.
-பேருவளை ஹில்மி