நாளை (15) இடம்பெறவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள்களை கொண்டு செல்லும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
அனர்த்த நிலைமைகள் ஏற்படும் இடங்களில் இருக்கும் சகல பரீட்சார்த்திகளும் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பரீட்சை ஆணையாளர் லசிக சமரகோன் குறிப்பிட்டுள்ளார்..