ரயிலில் பயணிப்பதற்காக ஹட்டன் நிலையத்தில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (02) மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மஸ்கெலியா, நல்லதண்ணி பகுதியைச் சேர்ந்த சுமார் 70 வயதுடைய பி.எஸ். ஆறுமுகம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ரயில் வரும் வரை பயணிகள் அமர்வதற்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் உயிரிழந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.