நாம் வழங்கிய அதிகாரத்தை கைமாற்றியுள்ளனர். இழந்த சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக மீண்டும் போராட வேண்டியுள்ளது.
வடக்கு, கிழக்கு மாத்திரமல்ல. முழு நாட்டையும் மீட்பதற்கு வாருங்கள். பழைய பகைகளை மறந்து இரண்டாவது சுதந்திர போராட்டத்துக்காக அனைவரும் இணைய வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கை எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் உப தலைவர் சட்டத்தரணி எல்.எஸ்.என் பெரேரா எழுதிய ஈழ மூடநம்பிக்கையின் வெளிக்கொணர்வு நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்றுமுன்தினம் (16) கொழும்பு பொது நூலகத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
எண்ணெய் தாங்கி விற்பனை செய்யப்பட்டமைக்கு வழக்கு தாக்கல் செய்தேன். சிங்கராஜா வனத்தில் உள்ள பகுதிகளை விற்பனை செய்யப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளேன். டெலிகோமை விற்க போவதாக அரசாங்கம் கூறுகிறது. ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை வழங்கப் போவதாக கூறினர். சுயாதீன தொலைக்காட்சியை விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர்.
அரசாங்க கட்டிடம் விற்பனைக்குள்ளது. பொலிஸ் தலைமையகம் விற்பனைக்குள்ளது. விமானப்படை தலைமையகமும் விற்பனைக்குள்ளது. தபாலகம் உட்பட ஹோட்டல்களும் விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர். இவ்வாறு தொடர்ந்தால் என்ன மிகுதியாக இருக்க போகிறது.
இந்த பிரச்சினையே தற்போது உள்ளது. வளங்களை ஏலத்தில் விடும் அரசாங்கங்களே ஆட்சி உள்ளன. ஏலத்தில் விடுபவர் அல்ல நாட்டுக்கு தலைவராக தேவைப்படுகிறார்.
69 இலட்சம் மக்கள் வாக்களித்தனர். அந்த 69 பேருமே இதற்கு பொறுப்பு கூற வேண்டும். 13ஆம் திருத்தின் ஊடாக காணி அதிகாரம் மற்றும் பொலிஸ் அதிகாரம் வழங்குப்படுமாயின் வழங்குபவர் பொறுப்பு கூற வேண்டும். அதுவே எனது நிலைப்பாடு. ரணில் விக்கிரமசிங்கவினால் அந்த இடத்துக்கு வரமுடியவில்லை. நாம் வழங்கிய அதிகாரத்தை கைமாற்றியுள்ளனர். அனைவரும் நன்கு ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். இம்முறை இலகுவானது அல்ல. எவரும் கதைப்பதில்லை. அவன் திருடினான். இவன் திருடினான் அதேயே கூறிக்கொள்கின்றனர்.
நான் வடக்கில் உள்ள தமிழ் சகோதரர்களுக்கு ஒன்றைக் கூறிக்கொள்கிறேன். வடக்கு, கிழக்கு மாத்திரமல்ல. முழு நாட்டையும் மீட்பதற்கு வாருங்கள். உங்களுக்கும் இல்லை. எங்களுக்கும் இல்லை. வாருங்கள் சுதந்திரப் போராட்டத்தை போன்று சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக போராட வேண்டியுள்ளது. இரண்டாவது சுதந்திர போராட்டத்துக்காக அனைவரும் இணைய வேண்டும். பழைய பகைகளை மறப்போம் என்றார்.
-எம்.வை.எம்.சியாம்