சியாம்பலாப்பே தெற்கு பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் தலை மற்றும் கை, கால்கள் இல்லாத நிலையில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலைப் பகுதி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள சபுகஸ்கந்த பொலிஸார் வர்த்தகரான திருமணமான ஆண் ஒருவரைத் தேடி வருகின்றனர்.
குறித்த சந்தேக நபர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (29) குறித்த பெண்ணின் சடலத்தை அவரது குடும்ப உறுப்பினர்களால் அடையாளம் காணப்பட்டது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகள் மற்றும் பெண்ணின் சகோதரி ஆகியோர் அடையாளம் காட்டினர்.
அங்கொட பகுதியில் வசித்து வந்த தமவிட்ட குருகே பிரதீபா சில்வா என்ற 52 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலத்தின் தலை மற்றும் கால்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதால், அவரது உடலைப் பிரேத பரிசோதனை செய்ய இன்னும் சில நாட்களாகும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.