ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், பரீட்சைகள் திணைக்களத்தால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறி செயற்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.