மலேசியாவின் கோலாலம்பூரில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தகவல்களின்படி, தம்பதியினர் தங்கள் குழந்தையுடன் குழந்தைகள் விளையாடும் பகுதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிரே குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஒருவர் அவர்கள் மீது மோதியுள்ளார்.
இந்த விபத்தில் தம்பதியர் உயிரிழந்துள்ளதுடன், குழந்தை உயிர் பிழைத்துள்ளது, மேலும் இந்த விபத்து அவர்களது குடியிருப்புக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
33 மற்றும் 35 வயதுடைய தம்பதியினர் மலேசியாவில் மென்பொருள் பொறியியலார்களாக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. (யாழ் நியூஸ்)